2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

’தீர்வு காணும் செயற்பாடுகளை தற்றுணிவுடன் மேற்கொள்ள வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும், தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கான நடவடிக்கைகளை, தற்றுணிவுடன் மேற்கொள்ள வேண்டுமென, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வடக்கு, கிழக்கு மாகாண வாழ் தமிழ் மக்கள் வாக்களிக்காமைக்கு பல காரணங்கள் உள்ளனவெனவும் தமிழ் மக்களின் ஜனாநாயகத் தீர்ப்புக்கு, ஜனாதிபதி மதிப்பளிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ஆகவே, புதிய ஜனாதிபதி சிங்கள, பௌத்த சித்தாந்தத்துக்குள் கட்டுற்று நிற்காது, தற்றுணிவுடன், இந்த நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .