2021 மே 10, திங்கட்கிழமை

தளபாடங்களை வழங்கி வைப்பு

Gavitha   / 2015 நவம்பர் 25 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

வடமாகாண சபை உறுப்பினர் திரு துரைராசா ரவிகரனால், அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு குரவில் தமிழ் வித்தியாலயத்துக்கான 50,000 ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் திங்கட்கிழமை (23) வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளும் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய திரு துரைராசா ரவிகரன், எமது மாணவர்கள் கல்வியிலும் சரி விளையாட்டிலும் சரி சளைதவர்கள் இல்லை என்றும் எனவே இம்முறை நடைபெறுகின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில், இதனை உறுதிப்படுத்தி காட்டவேண்டும் என்று தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X