2021 ஜனவரி 23, சனிக்கிழமை

தொழில்நுட்ப கூடத்தின் நிரமாணப் பணிகளை பூர்த்தி செய்ய கோரிக்கை

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வசாவிளான் மத்திய கல்லூரியால் அமைக்கப்பட்டு வந்த தொழில்நுட்ப ஆய்வுகூடத்தின் நிர்மாணப்பணிகள்  நிறைவு பெறாத நிலையில் காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த  ராஜாக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், கல்வியமைச்சினூடாக  அமைக்கப்பட்டு வந்த தொழில்நுட்ப ஆய்வுகூடத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன.   

கடந்த காலங்களில் வசாவிளான் மத்திய கல்லூரி உயர்பாதுகாப்பு வலயததுக்குள்  இருந்தது.  பின்னர்  இப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டது.

பாடசாலைக்கு மிகஅருகில் உயர்பாதுகாப்பு வலயம் உள்ள காரணத்தினாலும் இப் பாடசாலைக்கு கிடைத்த பல திட்டங்கள் அக் காலப்பகுதியில் செயற்படுத்த முடியாமல் போயிருந்தன.

1,000 பாடசாலை திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ஆய்வுகூடமும், தொழில்நுட்ப பீடமும் கிடைக்கப் பெற்றிருந்தது. தற்போது இவ்தொழில் நுட்ப ஆய்வுகூடத்தின் கட்டுமான பணிகள் முற்றுப்பெறாத நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக கல்லூரி சமூகம் கவலை தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக தேசிய கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பாடத்தை இக் கல்லூரி மாணவர்;கள் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்;பில் தேசிய கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என பாடசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .