Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - இலுப்பையடி பகுதியில், நடைபாதையில் வியாபாரம் செய்வதற்கு, நகரசபையால் மீண்டும் இன்று தடை விதிக்கப்பட்டது.
இதற்கமைய, இன்று வியாபாரம் மேற்கொண்ட சிலர் நகரசபையால் மீண்டும் அகற்றப்பட்டனர்.
இலுப்பையடி பகுதியில், கடந்த வருடம், டிப்பர் வானகம் மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதையும் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் காரணமாக நெரிசல்கள், விபத்துக்கள் இடம்பெறுதை சுட்டிக்காட்டியும், அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று, மீண்டும் அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு சிலர் முற்பட்டபோது, அது தொடர்பில், நகர வட்டார உறுப்பினர் ரி.கே.இராசலிங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து, தவிசாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து. தவிசாளர், நகரசபை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள மீளத்தடை செய்யப்பட்டதுடன், அங்கு வியாபாரம் நடவடிக்கை மேற்கொண்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் பொலிஸாருடன் இணைந்து நகரசபையினரால் மேற்கொள்ளப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago