2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலைக்கு அமைச்சரின் விஜயம்

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்துக் கொள்வதற்காக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா வியாழக்கிழமை (19) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மிக நீண்ட காலமாக நட்டான்கண்டல் பிரதேச வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படாமையினால், வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், உடனடியாக குறித்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்கக் கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் அடையாள உண்ணாவிரதம் என்பவற்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த வைத்தியசாலைக்கு, அண்மையில் புதிய வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையிலேயே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றை ஆராயும் நோக்கில் அங்கு விஜயம் செய்தார்.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் கூரை சீராக இன்மை,   தொடர்பாடல் சாதனங்களின் குறைபாடுகள் மற்றும் வைத்தியர் விடுதியில் நிலவிய குறைபாடுகள் உள்ளிட்ட பல குறைபாடுகள் தொடர்பில், அங்குள்ள ஊழியர்களினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது.

குறித்த குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .