2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

‘நந்திக் கடலைத் துப்புரவு பணிக்கு வனவளத் திணைக்களம் முட்டுக்கட்டை’

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு - நந்திக் கடலைத் துப்புரவு செய்வதற்கு, வனவளத் திணைக்களமே தடையாக உள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் நந்திக் கடலைத் துப்புரவு செய்வதற்கு பல முயற்சிகளும் அதற்கான கூட்டங்களும் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், நந்திக் கடலின் பகுதிகளில், வனவளத் திணைக்களம் தமது எல்லைகளாக அறிவித்து இருப்பதன் காரணமாக, துப்புரப்வு பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகத் தெரிவித்த அவர். அது மட்டுமன்றி மாவட்டத்தின் மக்களின் குடியிருப்புகள், காணிகளில் எல்லாம் வனவளத் திணைக்களம் எல்லைகளை நாட்டி இருப்பதன் காரணமாக, அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியவில்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.

மாவட்டத்துக்கு வருகின்ற நிதிகளும் திரும்பிச் செல்கின்றனவெச் சாடிய அவர், மாவட்டத்தின் அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களமே தடையாக உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை, வனவளத் திணைக்களம் மதிப்பதுவுமில்லை செயற்படுத்துவதுவுமில்லையெனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .