Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக மீன்கள் இறந்து கரையொதுங்கியதால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி ஜனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு இன்று (19) மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட்டுவாகல் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் உப தலைவர் செல்லையா யோகேந்திரராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் கடந்தவாரம் நிலவிய கடும் வரட்சி மற்றும் வெப்பம் காரணமாக பெருமளவான மீன்கள் இறந்து கரையொதுங்கின.
இதனால் இந்த நந்திக்கடலை நம்பி தொழில் செய்து வந்த, 250 க்கும் மேற்பட்ட மீனவக்குடும்பங்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை நம்பி வாழ்ந்த மீனவர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் மீனவர்களாகிய தமக்கு கடந்த 3 வருடங்களாக இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுவதனால் தமது தொழில்கள் முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளன என்றும், தமக்கு நிவாரண உதவிகளை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் வட்டுவாகல் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் மேற்படி சங்கத்தின் உபதலைவரிடம் இது பற்றி வினவியபோது, நந்திக்கடலை நம்பி, சுமார் 250 க்கும் மேற்பட்ட மீனவக்குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வரட்சியினால் மீன்கள் இறந்து கரையொதுங்கியமையால் அவர்களது வாழ்வாதாரத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தொடர்ந்து 6 மாதங்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்படவேண்டும். இதுதொடர்பான கோரிக்கைகளை தாம் பல்வேறு தரப்பினரிடமும் விடுத்திருக்கின்றோமெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago