2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நெற்களஞ்சியசாலை வேண்டும்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிராமத்தில் நெற்களஞ்சியசாலையை அமைத்துத் தருமாறு அக்கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்கிராமம், கிளிநொச்சி நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தூரத்தில் காணப்படுகின்றது. இக்கிராமத்தில் தற்போது 500 வரையான குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன், வன்னேரிக்குளத்தின் கீழ் 363 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இக்கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லைக்  களஞ்சியப்படுத்துவதற்கான வசதி இல்லை. எனவே, களஞ்சியசாலையை அமைத்துத் தருவதுடன், நெல் உலர வைப்பதற்கான தளமொன்றினையும் அமைத்துத் தருமாறும் இக்கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சிறுபோகச் செய்கைக்கான கூட்டத்தினை நடத்துவதற்காக இக்கிராமத்துக்குச்; சென்ற மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், வன்னேரிக்குளத்தின் உவர்ப் பரம்பலைத் தடுப்பதற்கும் குளத்தினை அபிவிருத்தி செய்து வன்னேரிக்குளத்தில் காணப்படுகின்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கிராம மக்களிடமும் விவசாயிகளிடமும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .