2021 மார்ச் 04, வியாழக்கிழமை

படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துங்கள்

George   / 2016 மே 17 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, மீனவர்களுக்கு அறிவித்துள்ளார்.

'மன்னார் பேசாலையில் திங்கட்கிழமை (16) வீசிய காற்றால் படகுகள் சேதமடைந்ததைச் சுட்டிக்காட்டி, காற்று வீசலாம் என்ற அனர்த்த அறிவிப்பு மாவட்டச் செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் முல்லைத்தீவு மீனவர்களும் தங்கள் படகுகளை பாதுகாப்பான பகுதிக்கு மாற்றவேண்டும்' என்றார்.

'சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக கடலுக்குச் செல்லவில்லை' என அவர் மேலும் கூறினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .