2021 ஜனவரி 27, புதன்கிழமை

‘படைப் புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை’

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், படைப் புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்டப் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பி. உகநாதன், இன்று (27) தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கடந்த கால போகத்தின் போது, படைப் புழுவால் சோளம், ஏனைய பயிர்களிலும் குறிப்பிட்டளவு பாதிப்பு ஏற்பட்டதாகவும் தமது திணைக்களத்தின் தொடர் நடவடிக்கைகளால் படைப் புழுவின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார்.

இந்நிலையில், மாணிக்கபுரம், வள்ளுவர்புரம் ஆகிய பகுதிகளில் தற்போதைய காலபோகத்தின் மேற்கொள்ளப்பட்டுள்ள சோளப் பயிர்ச்செய்கையில், சிறிய அளவில், படைப்புழுவின் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இருப்பினுத், அதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம், படைப்புழு தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .