2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

படையினரால் நிறுவப்பட்ட பெயர்ப் பலகையில் எழுத்துப் பிழை

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு – முள்ளிவளை, கேப்பாப்புலவு அரசினர் தமிழ்கட கலைவன் பாடசாலையில், 59ஆவது படைப்பிரிவால் நிறுவப்பட்ட பாடசாலைப் பெயர்ப் பலகையில் எழுத்துப் பிழை காணப்படுவதாக, பிரதேச கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.

அதாவது, முள்ளியவளை என எழுதபட வேண்டிய நிலையில், அப்பெயர்ப் பலகையில் “முல்லியவலை” என எழுதப்பட்டுள்ளது.

எனவே, இதனை உடனடியாக அகற்றுவதற்கு, பாடசாலை சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், பிரதேச கல்வி சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், இந்தப் பெயர்ப் பலகையை அமைப்பதற்கு, தெற்கைச் சேர்ந்த  ப்ரிட்ஸ்ரோ என்ற நிறுவனம் நிதி உதவிசெய்துள்ளதுடன், அந்த நிறுவனத்தின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெயர்ப் பலகையை அமைப்பதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்கியுள்ளதாக, 59 ஆவது படைப்பிரிவின் 2ஆவது பிரிவு படையினர் என பெயர் பொறிக்கப்பட்டு, படையினரின் சின்னத்துடனும் பாடசாலையின் பெயர்ப் பலகை நாட்டப்பட்டுள்ளமையும் கல்வி சமூகத்தின் மத்தியில் விசனததை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .