2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

போராட்டத்துக்கு அழைப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி, மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்றுக்கு, வவுனியா மாவட்ட பொது அமைப்புகளால் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று காலை வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஒன்று கூடிய வவுனியா மாவட்ட பொதுஅமைப்புகள் மற்றும் அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளால் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய, எதிர்வரும்  சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா மாவட்டசெயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்வதாக முடிவெடுக்கபட்டது. அதற்கமைவாக பொதுஅமைப்புகள் அரசியல்கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு ஒன்றும் உருவாக்கபட்டது. 

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர் இந்திரராஜா, நகரசபை தலைவர் இ. கௌதமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .