Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
எம். றொசாந்த் / 2017 ஜூலை 16 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு, திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளஉள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாரிய எதிர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்பிலுள்ள உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து, குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்துக்கு அருகிலுள்ள ஆலடிச் சந்தியிலிருந்து கூழாமுறிப்பு வரை சுமார் ஏழு கிலோமீற்றர் தூரத்துக்கு, இன்று காலை 11 மணியளவில் பேரணியாக மக்கள் நடந்து சென்றனர்.
குறித்த போராட்டத்துக்கு அணிதிரளுமாறு, சமூக வலைத்தளங்கள் ஊடாக சட்டவிரோதக் குடியேற்றங்களை எதிர்க்கும் இளைஞர் அணி எனும் அமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது.
இந்நிலையில், குறித்த போராட்டத்தை, பொலிஸார், சி.ஐ.டியினர் படம் பிடித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
2 hours ago