Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - கரைச்சிப் பிரதேச சபைக்குட்பட்ட சகல விலங்குப் பண்ணையாளர்களும், பிரதேச சபையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரைச்சிப் பிரதேச சபையின் 23ஆவது சபை அமர்வு, நேற்று (13), தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கிளிநொச்சி சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள விலங்குப் பண்ணையாளர்கள், தங்களது விலங்குகளை உரிய முறையில் பராமரிக்காததால், சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், சகல விலங்குப் பண்ணையாளர்களும், ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர், கரைச்சிப் பிரதேச சபையில் தமது பதிவுகளை மேற்கொண்டு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago