2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பிரதேச சபை உறுப்பினரிடம் விசாரணை

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகறாஜா ஜீவராஜாவிடம் தர்மபுரம் பொலிஸார் நேற்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவு , குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சுய விவரம் அடங்கிய கோவை ஒன்றை அனுப்புமாறு தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமைக்கு அமைவாக, நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்ற தர்மபுரம் பொலிஸார், அவரது அனைத்து தகவல்களையும் பெற்று சென்றுள்ளனர்

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஜீவறராஜாவை தொடர்பு கொண்டு வினவிய பொழுது, அவ்வாறான ஒருவிசாரனை நடைபெற்றதாகவும். குற்றத்தடுப்பு பிரிவு எனது அனைத்து தகவலையும் பெற்று அனுப்பச் சொன்னதாக கூறியே விசாரணை நடைபெற்றதாகவும் கூறினார்.

ஆனால் என்ன காரணத்துக்காக தகவல்கள் பெறப்பட்டது என கூறவில்லை எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .