Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தால், வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோதனைகள், இன்று (31) காலை ஆரம்பமாகின.
வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா தலைமையில் இச்சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன.
பொலிஸ் நிலையங்களைப் பரிசோதித்தல், பொலிஸாரின் உடைகளை பரிசோதித்தல், மோப்ப நாயை பரிசோதித்தல், பொலிஸாரின் பாவனையிலுள்ள ஜீப் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களும் சோதிக்கப்பட்டன.
மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் இத்தகைய அரையாண்டு சோதனைகள் பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்திலுள்ள மைதானத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.
இதன்போது மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.திஸ்ஸாலாத சில்வா, உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.பிரசன்ன வெலிகல, வவுனியா பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட வவுனியா பிராந்தியத்தில் இருக்கின்ற பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .