2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பொலிஸ் உத்தியோக ஆட்சேர்ப்பு;‘கிளிநொச்சியில் விண்ணப்பம் குறைவு’

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

பொலிஸ் உத்தியோக ஆட்சேர்ப்புக்காக, கிளிநொச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகக் காணப்படுவதாக, கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜெகத் குமார தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் 18 முதல் 28 வரை வயதெல்லை கொண்ட திருமணமாகாத  இளைஞர், யுவதிகள், இதற்கு விணப்பிக்குமாறுக் கேட்டுக்கொண்டார்.

வடக்கில் காணப்படும் தமிழ் மொழி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் பொலிஸ் சேவையை விரிவுபடுத்துவதற்கும், அவசர ஆட்சிர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும் அரச வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியுமெனவும், அவர் கூறினார்.

விண்ணப்ப படிவங்களை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும், ஜெகத் குமார கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .