Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூலை 15 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயனில் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர்த் திட்டமூடாக, அக்கராயன் மகா வித்தியாலயம், அக்கராயன் ஆரம்ப வித்தியாலயம் என்பவற்றிற்கு குடிநீர் வழங்கப்படாதது தொடர்பாக பெற்றோர்களினால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இக் குடிநீர்த் திட்டம் தொடர்பான ஆரம்பக் கூட்டத்தில், ஆறு மாதத்தில் குடிநீர் வழங்குவோம். இருபாடசாலைகளின் குடிநீர்ப் பிரச்சனைகளையும் தீர்ப்போம் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில் பாடசாலைக்குரிய காணியிலே நீர்த்தாங்கி அமைக்கப்பட்டது. நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இக்குடிநீர்த் திட்டத்தினூடாக அக்கராயன் மத்தி, கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன் மேற்கு ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகின்றது.
ஆனால் இருபாடசாலைகளுக்கும் குடிநீர் வழங்கப்படாததன் காரணமாக 1000 வரையான மாணவர்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அக்கராயன் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடமும் பாடசாலை நிர்வாகத்தினரால் குடிநீர் நெருக்கடி தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.
அக்கராயன் மகா வித்தியாலயத்தின் வளாகத்திலுள்ள குழாய்க் கிணறுகள் மாணவர்களின் குடிநீருக்கு பொருத்தமற்றதென நீர் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையிலும் மாணவர்கள் குடிநீர் நெருக்கடி காரணமாக அக்குழாய் நீரினையே பயன்படுத்துகின்றனர்.
6 hours ago
9 hours ago
19 Sep 2025
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
19 Sep 2025
19 Sep 2025