2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

பாடசாலையை பின்னடை செய்ய முயற்சி: கடற்தொழில் அமைப்பு குற்றச்சாட்டு

Administrator   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு வலயக்கல்வி அலுவலகர் பிரிவுக்குட்பட்ட மன்-தேவன்பிட்டி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளையும், பாடசாலையின் வளர்ச்சியினையும் திட்டமிட்டு பின்னடைய செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேவன் பிட்டி புனித சவேரியார் கடற்தொழில் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தேவன்பிட்டி புனித சவேரியார் கடற்தொழில் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து நேற்று வியாழக்கிழமை மதியம் ஆண்டங்குளத்தில் அமைந்துள்ள மடு வலயக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நீதி கேரினர்.

இந்தநிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் குறித்த மக்கலோடு கலந்துரையாடி மடு வலயக்கல்விப்பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலங்களில் மன்-தேவன் பிட்டி ஆரம்ப பாடசாலையின் அதிபர் திருமதி ப.யூட்டஸ் அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் அசம்பாவிதங்கள் எமது பாடசாலையை மட்டுமல்ல எமது சமூகத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தநிலையில், எமது ஆரம்ப பாடசாலையின் அதிபர் குறித்து அனுப்பப்படுகின்ற முறைக்கேடான, உரிமை கோரப்படாத கடிதங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ள முடியாத ஜீரணிக்க இயலாத நடைமுறைக்கு சாத்தியமற்ற பல விடயங்கள் குறித்து எமது சமூகம் விசனமடைந்த நிலையில் குறித்த கடிதங்களின் பிரதிகளையும் ஏற்கெனவே தங்களின் பார்வைக்கு அனுப்பி வைத்தோம்.

இருந்த போதும் ஆரம்ப பாடசாலையின் அதிபர் மட்டிலும், எமது சமூகம் மட்டிலும் தாங்கள் அக்கறையின்றியும்,மாற்று நடவடிக்கை எடுக்க விரும்பாததையும் நினைத்து எமது சமூகம் வேதனையும், விரக்தியும் அடைந்திருக்கின்றது.

மேலும் கடந்த 23-08-2015 அன்று காலை தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் ஏற்பட்ட முறைக்கேடுகள் தொடர்பான கடிதத்தை எழுதி கையொப்பமிட்டுள்ள நபர், எமது கிராமத்தில் எந்த காலத்திலும், எவ்வித பதிவுகளுக்கும் உட்படாதவர் என்பதும் இவருக்கும்,இக்கடிதத்துக்கும் உள்ள தொடர்பும், இக்குற்றச்சாட்டு தொடர்பில் எமக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

எனவே, குறித்த தனி நபரினால் முன் வைக்கப்பட்ட ஆரம்ப பாடசாலை அதிபர் மீதான் பொய்க்குற்றச்சாட்டு மிகவும் உண்மைக்கு புறம்பான செயற்பாடாகவும், பழிவாங்கும் நோக்கத்துடனும் எழுதப்பட்டதாக கருதுகின்றோம்'என்று தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X