2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்கான மரக்கறிக்கடைத்தொகுதி

Niroshini   / 2016 மார்ச் 27 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்கான மரக்கறிக்கடைத்தொகுதி 11 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை போதிய அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருகின்ற நிலையில், இங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், இதன் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தனர்.

புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்கான மீன்கடைத்தொகுதி ஏற்கெனவே அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளபோதும் மரக்கறி மற்றும் பலசரக்கு கடைத்தொகுதிகளுக்கான நிரந்தரக்கட்டடங்கள் இல்லாத நிலையில் தற்காலிக கொட்டகைகளில் குறித்த வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் நெல்சீப் திட்டத்தின் கீழ் சுமார் 11 மில்லியன் ரூபாய் செலவில் மரக்கறிக் கடைத்தொகுதிக்கான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

அத்திட்டத்தின் கீழ் 9 மில்லியன் ரூபாய் செலவில் பொது நூலகம் ஒன்றும் புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .