2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

பூநகரியில் உவர் நிலங்கள் வகைப்படுத்தப்படுகின்றன

Princiya Dixci   / 2016 ஜூலை 11 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில் மண்ணின் உவர்த்தன்மை அளவீடு செய்யப்பட்டு வகைப்படுத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உரிய தடுப்பணைகள் இல்லாமை, பயிர்ச் செய்கை கைவிடப்பட்டமை, அசாதாரண சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 05 ஆயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் உவர் நிலமாக மாற்றமடைந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு உவர்த் தன்மையான பகுதிகளில் சில நிலங்களில் பயிரிடக்கூடிய நெல்லினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூநகரி பிரதேசத்தில் மண் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உவர்த்தன்மை அளவீடு செய்யப்பட்டு அவை வகைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வகைப்படுத்தப்பட்ட பின்னர், அங்கும் எவ்வகையான பயிர்ச் செய்கைள் பயிரிட முடியுமோ, அவற்றைப் பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .