2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

68 பேர் சமுதாயம் சார் சீர்திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டனர்

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரையில் சிறுகுற்றங்கள் செய்தவர்கள் மற்றும் அபராதப் பணம் கட்ட இயலாத 68 பேர் சமுதாயம்சார் சீர்திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் கே.எம்.நஜீப் வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டமை, சிறிதளவு கசிப்பு, கஞ்சா வைத்திருந்தமை உள்ளிட்ட சிறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, அபராதம் கட்டமுடியாமல் இருப்பவர்கள், நீதிமன்ற கட்டளைக்கிணங்க சமுதாயம்சார் சீர்திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு சீர்திருத்தப் பணியுடன், உளவள மற்றும் மருத்துவ ஆலோசனைகள் உளவள வைத்தியர்களால் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X