2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்த சிறுமி சிறுவர் இல்லத்தில்

Princiya Dixci   / 2016 ஜூலை 12 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, திருமுறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த இளவயது திருமணம் செய்த சிறுமியை, சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு கிளிநொச்சிப் பொலிஸாருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா, நேற்றுத் திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார்.

பாடசாலைக்குச் சென்று வந்த மேற்படி 15 வயதுச் சிறுமி, 25 வயதுடைய இளைஞன் ஒருவரைக் காதலித்து, தனது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பில் அறிந்த சிறுவர் நன்னடத்தை அதிகாரி, இந்த விடயத்தை பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

அதற்கிணங்க பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் இணைந்து சிறுமியை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதவான், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .