Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
கடந்த கால யுத்தம் காரணமாகவே பொதுமக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியிருந்ததாகவும் எனினும், யுத்தம் நிறைவடைந்த நிலையில் காணிகளை மக்களிடம் மீளக்கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
பொதுமக்களுக்கும் ஆளுநருக்குமிடையில் நேற்றையதினம் (09) முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2009 ஆண்டுக்குப் பின்னர் கொக்குத்தொடுவாய் முகத்துவாரம் பகுதியில் தொழில் செய்வதற்காக தற்காலிகமாக வசித்து வரும் தென்னிலங்கை மக்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
இடம்பெற்ற காணிப்பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமது காணிகள் தொடர்பில் அதிகமான முறைப்பாடுகளை, காணி உரிமையாளர்கள், வடமாகாண ஆளுநரிடம் முன்வைத்திருந்தனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவே தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும், அவற்றை மீண்டும் இராணுவத்திடம் கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அளுநர், தொடர்ந்தும் இராணுவத்தால் மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, யாழப்பாணத்தில் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் சிலருக்கு ஆரம்ப காலங்களிலிருந்து சொந்தக் காணிகளே இருக்கவில்லை எனவும் தற்போது அரசாங்கத்தாலேயே காணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago