2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

முசலியில் குடிநீருக்கு பணம் அறவீடு

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலிப் பகுதியில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீருக்கு, முசலி பிரதேச சபை பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக, அனைத்துப் பகுதி மக்களும் குடிநீர் பிரச்சினையால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், வரட்சி காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கான குடிநீர் முசலிப் பிரதேச சபையால் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, 1,000 லீட்டர் தாங்கியில் நீர் நிறப்புவதற்கு 300 ரூபாயும் 500 லீட்டருக்கு 150 ரூபாயும் 200 லீட்டருக்கு 80 ரூபாயும் வாளி, குடங்களுக்கு 30 ரூபாய்க்கு மேல் அறவிடப்படுவதாக, மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து, முசலி பிரதேச சபைத் தவிசாளர் எம்.சுபிஹானிடம் வினவிய போது,

முசலி பிரதேச சபைக்கு என வருமானங்கள் இல்லையெனவும் எரிபொருள் செலவு மற்றும் வாகன திருத்த வேலைகளுக்காக இவ்வாறு குடிநீருக்கு மக்களிடம் பணம் அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்களை,  தேசிய நீர் வழங்கல் சபையிடம் அடையாளப்படுத்தினால், அச்சபையினர் மக்களுக்கு இலவசமாகவே நீர் விநியோகம் செய்து கொடுப்பார்களென, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--