Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஓமந்தை பகுதியில், நேற்று (06) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில், இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் பணியாற்றிய மதுரசிங்க (வயது 41) என, ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, ஓமந்தை கமநல சேவை நிலையத்துக்கு முன்பாக மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இராணுவ வீரர், படுகாயமடைந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago