2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் கலந்துரையாடல்

Editorial   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

“சமய நல்லிணக்க செயற்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில், சர்வமத சகவாழ்வு கலந்துரையாடல், மன்னார் வாழ்வுதையத்தில் இன்று (29) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

மன்னார் வாழ்வுதைய திட்ட இணைப்பாளர் நீ.றொன்சன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை செ.அன்ரன் அடிகளார், திட்டக் கண்காணிப்பு இணைப்பாளர் எஸ்.றேசுதாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார் வாழ்வுதயத்தால், கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள சமய நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்களுக்குக் கொண்டுச் செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இலங்கையில், 12 மறை மாவட்டங்களில் 13 நிலையங்களில் குறித்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

3 வருட திட்டத்தின் போது மன்னார் மாவட்டத்தில் வட்டக்கண்டல், ஆண்டாங்குளம், அளவக்கை, அடம்பன், செம்மண் தீவு ஆகிய 5 கிராமங்கள் குறித்த நிகழ்ச்சி திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராமங்களில் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

குறித்த நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பிலும், அவற்றை மக்களுக்கு கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .