2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மன்னாரில் கொடி வார நிகழ்வு ஆரம்பம்

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் 'கொடி வாரம்' இன்று புதன்கிழமை(25) மன்னாரில் ஆராம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் இடம்பெற்ற ஆராம்ப நிகழ்வின்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவுக்கு வைபவ ரீதியாக முதற் கொடி குற்றப்பட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கொடி வார நிகழ்வு மன்னாரில் வைபவ ரீதியாக ஆராம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் கொடி அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட சம்மேலனத்தலைவர் சி.விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .