2021 மே 08, சனிக்கிழமை

மனோவின் கிளிநொச்சி விஜயம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 20 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் மனோ கணேசன், நேற்று வியாழக்கிழமை (19) கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார். இதன்போது கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுஅமைச்சின் அலுவலகத்தைப் பார்வையிட்டதுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். 

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மனோ கணேஷனை சந்தித்த பொது மக்கள் சார்பில் தாயொருவர், காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபன புகைப்படம் ஒன்றில் தனது மகள் காணப்பட்டதாக இத்தாய் இதன்போது சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X