2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

’மரகத மொழியாழ்’ பொழிவுபெற்றது

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சிபாரிசுக்கு அமைய, யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கிழக்கு, மரகத மொழியாழ் வீதி, கம்பெரலிய திட்டத்தின் இரண்டு மில்லின் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள பல வீதிகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த நிலையில், நெடுந்தீவு பிரதேசத்தின் அபிவிருத்தித் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, சிவஞானம் சிறிதரன் எம்.பியால் பல்வேறு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுவதுடன், கூடுதலான வீதிகளின் புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கம்பெரலியத் திட்டத்தின் கீழ், மரகத மொழியாழ் வீதி தார் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .