Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முசலி மண்ணில், திறமையுள்ள வீரர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது திறமைகள் தேசிய, சர்வதேச ரீதியில் அவர்களது கீர்த்தியும் பெருமையும் பறை சாற்றப்படல் வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மன்னார் வேப்பங்குளம் முஹம்மதியா விளையாட்டுக் கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று நேற்று (17) வேப்பங்குளம் கரப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
விளையாட்டுக்கள் மூலம் மனிதன் திடமானவனாக மாறுகிறான். அவனது உடலும் உளமும் உறுதியடைகின்றன.
கரப்பந்து இலங்கையின் தேசிய விளையாட்டாகும். இந்த விளையாட்டு இப் பகுதிகளில் பிரபல்யமானதாக இருக்கின்றது.
மேலும், அரசியலில் அடிமைகளாக இருக்காமல் எமது சொந்தக் கால்களில் நிற்கவும் எமது உரிமைகளை வென்றெடுக்கவும் நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .