2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுதிறனாளிக்கு சக்கரக்கதிரை வழங்கல்

Yuganthini   / 2017 ஜூலை 20 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனொருவருக்கு, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் சக்கரக் கதிரையொன்று வழங்கப்பட்டதுடன், அவருக்குத் தேவையான உதவிப் பொருட்கள் சிலவும் கையளிக்கப்பட்டன.

சமூக சேவைகள் அமைச்சின் சமூகமட்ட புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 16,500 ரூபாய் பொறுமதியான மலசலகூட வசதியுடன் கூடிய சக்கரக் கதிரையும் விபத்தினால் பாதிக்கப்பட்ட 30 வயதான பெண்ணொருவருக்கு 10,000 ரூபாய் பெறுமதியான காற்றுமெத்தையும், இதன்போது வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன், வைத்திய அதிகாரி ஜெயராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .