2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

முல்லைத்தீவு மீனவர்கள் மீண்டும் கிளர்ந்தனர்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், சட்டவிரோத மன்பிடி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த மாவட்ட மீனவர்களால், இன்று (17) மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சுருக்குவலை மீன்பிடி முறைமைக்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், வாயில் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறு அமைதியான முறையில், போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதற்கமைய, முதலில் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளதிணைக்களத்துக்கு எதிரே இன்றுக் காலை 9 மணியளவில் ஒன்றுகூடிய மீனவர்கள், அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரியிடம் மகஜரொன்றைக் கைளித்தனர்.

இதையடுத்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றப் மீனவர்கள், மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை, மீனவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து, குறித்த இடத்துக்கு வருகைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஆகியோரைக்கு கையளிக்க வேண்டிய மகஜர்களை, மீனவர்கள் கையளித்தனர்.

அத்துடன், மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரனைச் சந்தித்த மீனவர்கள், அவருடன் கலந்துரையாடி, மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X