2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'முகமாலைக்கு குடியேற அனுமதியளிக்கவும்'

Menaka Mookandi   / 2016 ஜூலை 28 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முகமாலை பகுதியிலுள்ள வெடிபொருட்களை விரைவாக அகற்றி, தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு முகமாலைப் பகுதி மக்;கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள முகமாலை தெற்கு, அம்பளாவளை, இந்திராபுரம், மடத்தடி, நவனிவெளி மற்றும் இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முழுமை பெறாமையால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில், அதனை அண்டிய பகுதிகளிலும் பிற மாவட்டங்களிலுமே வசித்து வருகின்றனர்.

மேற்படி பகுதிகளில் மீளக்குடியேறவென, இதுவரையில் 248 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வரையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நிலையில், யுத்த சூனிய பிரதேசமாகவும், நீண்டகாலம் போர் முனையாகவும் காணப்பட்ட இப்பகுதியில், ஏராளமான வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதுடன் வெடிக்காத நிலையிலும் ஏராளமான வெடிபொருட்கள் காணப்படுகின்றன.

மிகவும் ஆபத்தான பகுதியாக இப்பகுதி காணப்படுவதுடன், இப்;பகுதியில் வெபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெடிபொருட்;களை விரைவாக அகற்றி தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகமாலைப் பகுதியிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு போதியளவு நிதி இல்லை எனவும் இதனால், கண்ணிவெடி அகற்றும் பணியானது தாமதமடைவதாக முகமாலைப் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றும் பணியை மேற்கொள்ளும், ஹலோ ட்ரஸ்ட் மனிதாபிமான நிறுவனத்தின் இலங்கைக்கான உதவிப் பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .