Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூலை 08 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை அமைந்துள்ள காணியானது, தனியாருக்குச் சொந்தமானதாக காணப்பட்டு வந்த நிலையில், அதனை வைத்தியசாலைக்கென பெறுவதில் இருந்து வந்த இழுபறி நிலை, முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தீர்மானத்துக்கமைய, இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான பொறுப்பு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு அமைவாக, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள், காணி உரிமையாளர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று, கடந்த 28.06.2016 அன்று தண்ணீரூற்றில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் சந்திப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் தொடராக இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் (06.07.2016) வவுனியா குடியிருப்பு வீதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா, வைத்திய கலாநிதி சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி வெளிக்கள அலுவலர் சரவனன் மற்றும் காணி உரிமையாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இச்சந்திப்பில், வைத்தியசாலைக்கான காணியானது, 2012ஆம் ஆண்டு செய்யப்பட்ட அளவீட்டின் பிரகாரம், பிரதான வீதி அருகிலிருந்து 25 ஏக்கர் அளவுள்ள காணியை வைத்தியசாலைக்கு வழங்கவதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். இக்காணிக்கான பெறுமதி மீள மதிப்பிடப்பட்டு காணி உரிமையாளர்களுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
2 hours ago
4 hours ago
15 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
15 Oct 2025