2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மாவட்ட விவசாயப் பண்ணை காணியில் பொருளாதார மத்திய நிலையம்

Niroshini   / 2016 மார்ச் 16 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாய உற்பத்திப்பொருட்கள் விற்பனைக்கான விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைக்க, வவுனியா ஏ-9 வீதிக்கு அருகிலுள்ள மாவட்ட விவசாயப் பண்ணையின் ஒரு பகுதியை ஒதுக்குவதாக முடிவெட்டப்பட்டது.

விவசாய உற்பத்திப்பொருட்கள் விற்பனைக்கான விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணி வழங்கல் தொடர்பான விசேட கூட்டமொன்று, திங்கட்கிழமை (14) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் றோகணபுஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது.

கடந்த வருட இறுதியில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின்போது, வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சந்தைவாய்ப்பு பிரச்சினை தொடர்பில், வட மாகாண சுகாதார அமைச்சர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதுக்கமைய, வவுனியாவில் விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மேற்படி தேவைக்கான காணிதொடர்பில் முடிவெதுவும் எடுக்கப்படாத நிலையிலேயே, விசேட கூட்டம் அரசாங்க அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--