2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

விடுகைப் பத்திரத்தை பெற வருபவர்களிடம் பணம் வசூலிக்கும் பாடசாலைகள்

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள சில பாடசாலைகள், விடுகைப் பத்திரம் பெறச் செல்பவர்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின்  1 இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக விண்ணப்பிப்பதற்காக, இளைஞர் - யுவதிகள் நேர்முகத் தேர்வுக்கான ஆணங்களை தயார்ப்படுத்தும் வகையில், தாங்கள்  கல்வி கற்ற பாடசாலைகளுக்குச் சென்று விடுகைப் பத்திரங்களைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுகைப் பத்திரத்தைப் பெறச் சென்ற  இளைஞர், யுவுதிகளிடம், பாடசாலையின் அபிவிருத்திக்கு பணம் தருமாறு கோரி, பாடசாலை நிர்வாகங்களால் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி இளைஞர்கள், யுவதிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X