Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியில் பொலிஸார் இருப்பதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அதன் ஓர் அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது காணியை குத்தகைக்கு கொடுத்திருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தரும் அவரது மனைவி மற்றும் மகளும் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.
கனகராயன்குளத்தில் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தரை, இன்று (12) வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், தனக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக குத்தகைக்கு கொடுத்ததும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னரும் காணியை மீள ஒப்படைக்காத விடுதி உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்ததும் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்ட செயலே ஆகும்.
ஆனால் காணி உரிமையாளருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்துவைக்கவேண்டிய பொலிசாரே அதற்கு வன்முறைவடிவம் கொடுத்து காணியின் உரிமையாளரை கடுமையாக தாக்கியதோடு அதனை தடுக்கமுனைந்த அவரது மனைவியையும், மகளையும் தாக்கியுள்ளமையும், காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் விலங்கிடப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பதும் சட்டதிட்டங்களுக்கும், மனிதாபிமானத்துக்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.
புனர்வாழ்வுபெற்ற ஒரு முன்னாள் போராளிக்கு நேர்ந்துள்ள இந்நிலைமையானது மிகுந்த மன வேதனையளிக்கிறது. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்த இவர்கள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கும் இன்யை சூழலில் பொலிசார் இவ்வாறான சம்பவங்களை அரங்கேற்றுவது பொருத்தமானதல்ல.
இச்சம்பவத்தை திட்டமிட்ட செயலாகவே கருதமுடிகிறது. பொலிசாரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.
8 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
18 Sep 2025