2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

68 வருடங்களாக ஏமாற்றப்பட்டுள்ளோம்

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கடந்த 68 வருடங்களாக இலங்கையில் ஆட்சி செய்த அரசாங்கங்களால் நாங்கள் ஏமாற்றப்பட்;டிருக்கின்றோம்' என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்தார்.

'தேசிய நல்லிணக்கமும் நாட்டின் எதிர்காலமும்' எனும் தலைப்பில் பகிரங்க சொற்பொழிவு, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஏமாற்றப்பட்டாலும், மாறிமாறி அரசாங்கங்களை ஆட்சிக்கு கொண்டு வந்தோம். ஆனால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் கிடைக்கவில்லை. எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை. இந்த நிலைமை வடக்கிலும் தெற்கிலும் அதிகம் காணப்படுகின்றன.

வடக்கில் நிலைமை மோசமாகவுள்ளது. யுத்தத்தில் உயிரிழந்தவர் அமைச்சர்கள், கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் அல்ல. அப்பாவி சிங்கள, தமிழ் இளைஞர்களே. பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு கல்விக்கு ஒரு நல்ல சந்தர்ப்பங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். மாணவர்;கள் கல்வி கற்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

ஆனால் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சென்று கல்வி கற்றுவிட்டு மீண்டும் நாட்டுக்கு வந்து தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். அமைச்சர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாகாணசபை உறுப்பினர்களாக ஆட்சிக்கு வருகின்றனர். எமது பிள்ளைகள் அடிப்படைக்கல்வியும் இல்லாது அடிப்படை தொழில் வாய்ப்பும் இல்லாது மிகவும் கஸ்டப்படுகின்றார்கள்' என்றார்

'வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் மிகவும் பாரிய பிரச்சினையாகவுள்ளது. இந்திய மீனவர்;களின் துன்புறுத்தல்கள் இங்கு அதிகம். இதனால் எமது மீனவர்களின் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பலரைக் கடத்தி கொலை செய்தார்கள். பொதுமக்களின் சொத்துக்களை அழித்தார்கள். யாழ். பொது நூலகத்தை எரித்தார்கள்.

எமது செயற்பாட்டு உறுப்பினர்களான லலித், குகன் ஆகியோரை கடத்தினார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்று வரை தெரியாது.

இப்படி தொடர்ந்து ஆட்சி செய்யும் அரசாங்கத்;தால் நாங்கள் துன்புறுத்தப்;பட்டு வருகின்றோம். இதை எதிர்த்து நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்த்து எமது உரிமைக்;காக போராடுவோம்' எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .