Editorial / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் சுமார் 114 வரையான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்வாதார வசதிகள் இன்றியும் வருமானங்கள் இன்றியும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வாருவதாக மாதர் கிராமஅபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள தேவிபுர் அ. பகுதியில் 683 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் 114 வரையான குடும்பங்கள் பெண்தலைவர்களாக கொண்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களாகவே வாழ்ந்து வருகின்றன என்று தெரிவித்த நிர்வாகம், குறித்த குடும்பங்கள் யுத்தத்தின் போது கணவன்மாரை இழந்த, காணாமல் போன குடும்பங்களாகவும் கணவனால் கைவிடப்பட்ட குடும்பங்களுமே அதிகளவில் காணப்படுகின்றனவெனவும் தெரிவித்தது.
இதேவேளை இப்பகுதியில் ஏற்கனவே வழங்கப்பட்ட மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியேறி, நீண்ட காலமாக வாழ்ந்து வரும் 142 வரையான குடும்பங்கள் இதுவரை வீட்டுத்திட்டமோ அல்லது ஏனைய அடிப்படை உதவிகளையோ பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.
இதில் பெண் தலைமைத்துவ குடும்பங்களும் அதிகளவில் இவ்வாறு உதவிகளை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் காணப்படுகின்றன என்றும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வை முன்னேற்ற அனைத்து சமூகமும் முன்வரவேண்டும் எனவும் மேற்படி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025