2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’வவுனியாவிலும் படைப்புழு தாக்கம் அதிகரிப்பு’

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோளப்பயிர்ச் செய்கையில், படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ளதாக, வவுனியா மாவட்டப் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சகிலாபானு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், வவுனியா மாவட்டத்தில், 500 ஏக்கரில் சோளப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 100 ஏக்கரைப் படைப்புழு தாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், படைப்புழு தாக்கிய சோளப்பயிர்ச் செய்கைப் பகுதிக்கு விவசாயத் திணைக்கள அதிகாரிகள் குழு நேரடியாகச் சென்று, படைப் புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும், அவர் கூறினார்.

இவ்வாறான தாக்கமுள்ள விவசாயிகள், சோளப் பயிரின் குருத்துப் பகுதியில் சாம்பலையோ அல்லது மணலையோ பிரயோகித்துக்கொள்ளுமாறும், அவர் அறிவுறுத்தினார்.

அத்துடன், உங்கள் பகுதி விவசாய போதனாசிரியரையோ அல்லது தமது தலைமை காரியாலயத்தின் 024 - 2222324 என்ற தொலைபேசி இலக்கத்துடன் ஊடாகவோ தொடர்புகொண்டு அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .