2021 ஜனவரி 16, சனிக்கிழமை

வவுனியாவில் புதையல் தோண்டிய அறுவர் கைது

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - நைனாமடு பகுதியில், நேற்று (23), புதையல் தோண்டிய 6 பேரை, புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், மரக்காரம்பளை, ஓமந்தை, நெடுங்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் இவ்வாறு 39, 40, 42, 44, 46,56 வயதுடையவர்களெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினமிரவு 11.30, மணியளவில், நைனாமடு பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில், 6 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த 6 பேரையும் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, மண்வெட்டி, பூஜைப் பொருள்கள், மோட்டார் சைக்கிள், ஓட்டோ என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .