2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களிடம் விசாரணை முன்னெடுப்பு’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

 தாங்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு வந்த சிவில் உடையில் வருகைதந்த இருவர், தம்மை பொலிஸார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தமது போராட்டம் தொடர்பாக விசாரித்திருந்தனரென, வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வவுனியாவில், நேற்று (20) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர்கள், ஜனநாயக ரீதியிலே புதிய ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவுசெய்யப்பட்டுள்ளாரெனவும் சிங்கள அரசு தான் மாறியிருக்கிறதே தவிர சிங்கள அரசாங்கம் மாறவில்லையெனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாம் ஜனநாயக முறையிலேயே  சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான தீர்வுக்காக தொடர்ந்து போராடி வருவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

புதன்கிழமையன்று (20) தாங்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு சிவில் உடையில் வருகைதந்த இருவர், தம்மை பொலிஸாரென அறிமுகப்படுத்திக் கொண்டு, தமது போராட்டம் தொடர்பாக விசாரித்திருந்தனரெனத் தெரிவித்த சங்கத்தினர், “குறித்த போராட்டத்தைத் தொடர்ந்து  நடத்த போகின்றீர்களா அல்லது முடிப்பீர்களா?” என தம்மிடம்  வினவியதாகவும் கூறினர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்கிய நிலையில், அவர் தமக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்கவில்லையெனத் தெரிவித்த சங்கத்தினர், தற்போது வந்திருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமது பிரச்சினை தொடர்பாக என்ன சொல்லபோகின்றாரென தமக்குத் தெரியவில்லையெனவும் கூறினர்.

எனவே, தமக்கு யார், எப்போது தீர்வை வழங்குகிறார்களோ, அந்த நேரமே குறித்த போரட்டத்தை நிறுத்துவோமெனவும், அவர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .