2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் எல்.ரி.ரி.ஈயினரின் ஆயுதங்கள் மீட்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோமேஷ் மதுசங்க

வவுனியா, சின்னதம்பனை நீலியாமோட்டைப் பிரதேசத்தில் யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் உள்ளிட்ட யுத்த ஆயுதங்கள், விமானப் படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினாரால் இன்று (25) மீட்கப்பட்டன.

வன்னி விமானப்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் வவுனியா குருக்கள் புதுக்குளம் பொலிஸ், விசேட செயலணிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

மிதிவெடிகள் - 49, 60 மில்லிமீட்டர் மோட்டர் குண்டுகள் - 82 ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டு, அழிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .