2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட அடம்பன்குளம் மக்கள் உண்ணாவிரதம்

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா, அடப்பன்குளம் கிராம மக்கள், தமது கிராமமானது, வீட்டுத்திட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகக்கூறி, நேற்றுக் காலை முதல், உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

அடப்பன்குளம் அம்மன் கோவில் வாளகத்தில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது கிராமத்துக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம், திடிரென வேறு கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இக்கிராம மக்கள், தாம் 1984ஆம் ஆண்டு யுத்த அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து இந்தியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் வாழந்து வந்த நிலையில், தங்களது சொந்த கிராமங்களில் மீள்குடியேறி 7 வருடங்களாகிய போதிலும், 20 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம், தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--