2021 மே 06, வியாழக்கிழமை

வீதியை விட்டு விலகி தாறுமாறாக பயணித்த லொறி விபத்து

George   / 2016 ஜூலை 29 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி புதுக்காட்டு சந்தி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த டிப்பர், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குறித்த பகுதியில் அமைந்துள்ள கடைகளை சேதமாக்கியுள்ளது.

குறித்த விபத்தில் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி நித்திரை கலக்கத்தில் வாகனம் செலுத்தியமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி குறித்த பகுதியில் அமைந்துள்ள 3 கடைகளை சேதப்படுத்தியதுடன், கடைகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களை முழுமையாக சேதப்படுத்தியுள்ளது,

விபத்து தொடர்பிலான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .