2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேட்டையார் முறிப்பு பிரதான வீயில் இன்று வியாழக்கிழமை காலை 5.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் பயணித்துக்கொண்டிருந்தபோது வேட்டையார் முறிப்பு பகுதியில் குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் உள்ள மதகுடன் மோதி குறித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலக சாரதி மற்றும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .