George / 2016 மார்ச் 19 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கரடிப் போக்குச் சந்தியில் வான் ஒன்றும் இலங்கை மின்சார சபை வாகனமும் மோதியதில் வானில் பயணித்த சுற்றுலாப் பயணியொருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (18) காலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹாவைச் சேர்ந்த நவரத்தின சமரகொடியே டிலானி (வயது 70) என்ற சுற்றுலாப் பயணி உயிரிழந்ததுடன், அத்திகிரிய விமலரத்தின தேரர் உட்பட நால்வர் காயமடைந்தனர்.
கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வான் இலங்கை மின்சார சபை வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago