2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

'வாழ்வாதார மீள் எழுச்சிக்கு புலம்பெயர் உறவுகளின் உதவிகளே காரணம்'

George   / 2016 மே 18 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீவன்

மீள்குடியேற்றத்தின் பின்னரான காலப்பகுதியில் எமது மக்களின் வாழ்வாதார மீள் எழுச்சிக்கு புலம்பெயர் உறவுகளின் உதவிகளே பிரதான காரணமாகும்  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள  பெண்கள் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் வைத்து செவ்வாய்க்கிழமை அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மக்களின் தேவைகளை முற்றுமுழுதாக நிறைவேற்றியுள்ளதாக வெளிநாடுகளுக்கு பொய் பிரசாரங்கள் மேற்கொண்டு எமது மக்களுக்கு வழங்கப்படவேண்டிய உதவிகளை பெருமளவுக்கு தடுத்து நிறுத்தியது.

இருந்தாலும், யுத்தத்துக்கு பின்னரான காலத்தில் எமது மக்களின் வாழ்வாதார எழுச்சியானது புலம்பெயர் எமது உறவுகளின் உதவிகளாலேயே சாத்தியப்படுத்தக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், எமது மக்கள் தமக்கு வழங்கப்படுகின்ற உதவிகளை உச்ச அளவில் பயன்படுத்தி தமது பொருளாதார மேம்பாட்டினை அடைந்துகொள்ள வேண்டும் இதுவே  அவ்வுதவிபுரிந்த எம் புலம்பெயர்ந்த உறவுகளின் எதிர்பார்ப்பாகும்' என்றார்.

முன்னதாக, தெரிவுசெய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு விவசாய முயற்சிகளுக்காக 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .