2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

பாலியல் வல்லுறவு மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளியொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று 10 வருட கடூழிய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

16 வயதுக் குறைந்த தனது மருமகள் முறையான பெண் பிள்ளையொன்றை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கே வவுனியா  மேல் நீதிமன்ற நீதிபதி சந்தரமணி விஸ்வலிங்கத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, குற்றவாளி 25, 000 ரூபா தண்டப் பணமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 75,000 ரூபாவும் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.அதனை வழங்க தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருடம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கினை சட்டமா அதிபர் சார்பாக அரச சட்டத்தரணி நிஸாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .